ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் தலைவியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அடுத்த சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளதோடு, பின்னர் உடனடியாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைப்பாளர்களை இணைத்துக் கொண்டு ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டு கட்சிக்கு எதிராக நடவடிக்கையினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர் நாட்டுக்குத் திரும்பிய உடன் மொட்டுவுக்கு ஆதரவு வழங்குவதற்கு இணைந்து கொண்டுள்ள ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் தனித்தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சி, மொட்டு கட்சியுடன் இணைந்து கொண்டமைக்கு எதிராக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஏற்பாடு செய்வதற்கு அவர் தற்போதே திகதி மற்றும் நேரங்களை ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்திரிகா சனிக்கிழமை நாடு திரும்புகிறார் : மொட்டுவுக்கு எதிராக புதிய நடவடிக்கை!
