ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து போ் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்க

முன்வருவதற்கு ஆயத்தமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியினால் நடாத்திச் செல்லப்படும் Lanka Lead News இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இணையத்தளச் செய்திக்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நெருக்கமான இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித் தரப்பின் முக்கிய இரண்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வைத்தே இந்த பேச்சுவார்ததை இடம்பெற்றுள்ளதோடு, அந்த பாராளுன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடிக்கும் அதிக பணமும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியும் வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி