ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான ஆதரவாளா்கள் இம்முறை ஜனாதிபதி தோ்தலில் வாக்களிக்காமலிருப்பதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாகவும் எவ்வாறான

நிலையிலும் ஸ்ரீ.ல.சு.கட்சினா் மொட்டுவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் குமார வெல்கம தெரிவித்தாா்.

ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினரான அவா் நேற்று முன்தினம் இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளை விபரித்து ஊடகவியலாளர்களிடையே பேசும் போதே இதனைத் தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“தற்போதைய அரசியல் நிலையினை நீங்கள் எல்பிட்டி பிரதேச சபைத் தோ்தல் முடிவுகளை வைத்து புரிந்து கொண்டிருப்பீா்கள்.  எனது கட்சியான ஸ்ரீ.ல.சு.கட்சி நான் நினைக்கிறேன் 5300 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது. அதாவது 12 வீத வாக்குகள்.

இதிலிருந்தே தெரிகின்றது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு இந்தளவு அடிக்கும் போது ஸ்ரீ.ல.சு.கட்சியை தவறான பாதையில் தலைவர்கள் கொண்டு செல்லும் நேரத்தில் இவ்வாறு முற்போக்குடைய எல்பிட்டி பிரதேச சபையில் இருப்பதையிட்டு நான் முதலில் அந்த மக்களுக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி