பிரேமதாச யுகம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என இந்த நாட்டில் வாழும் மிக வறிய மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க

தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா ஆசனத்தை பலப்படுத்தும் கூட்டம் இன்று டிக்கோயா நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,இந்த தேர்தலில் நாம் தோல்வியுற்றால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் நாம் பாரிய பின்னடைவினை சந்திக்க நேரிடும். எனவே எமக்கு ஐக்கிய தேசியக் கட்சியினை வெற்றி பெற செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது.

இல்லையேல் ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் பல வருடங்களுக்கு பின்நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இது உங்களுக்கு தேவையா? எங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு வேலை செய்ய முடியாவிட்டாலும் கூட நாங்கள் கிராமங்களுக்கு வேலை செய்துள்ளோம்.

கினிகத்தேனை நகரை அபிவிருத்தி செய்துள்ளோம். இந்த நாட்டில் சுதந்திரமாக செயப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளோம்.குறைப்பாடுகள் உள்ளன. ஆனால் மீண்டும் அந்த அச்சமான சூழலுக்கு நாட்டை இட்டு செல்வதா என தீர்மானிக்க வேண்டும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு இராணுவ ஆட்சி அவசியமில்லை. எமக்கு தேவையானது சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு அரசாங்கமே.எனவே நான் நினைக்கின்றேன், ஜனநாயக ஆட்சி ஒன்றினை ஏற்படுத்துவதற்கு நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று.இந்த நாட்டில் இளைய தலைமுறை ஒன்று இன்று உருவாக உள்ளது. சஜித் பிரேமதாச சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடிய ஒரு தலைவர்.அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர் அல்ல. அவர் இலங்கை பிரஜை. சிறிய தேர்தல்களுக்கு முகம் கொடுத்து ஜனாநாயக ரீதியாக வந்தவர் என கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி