எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை கீழ்படிச் செய்யும் எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட மாட்டேன் என  புதிய ஜனநாயக முன்னணியின்

ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றால் எந்தவொரு நாட்டுடனும் சிறந்த தொடர்புகளைப் பேணுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொனராகலை - பிபிலை நகரத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாட்டை நேசிக்கும் பிரஜை என்ற அடிப்படையில் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் இராணுவ வீரர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம். கடந்த அரசாங்கம் இராணுவத்தின் இடங்களை சர்வதேசத்திற்கு விற்றது. ஆனால் எமது அரசாங்கத்தில் இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் தனி கிராமங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. 

எனக்கு சகோதரர்களையோ அல்லது குடும்பததையோ பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web