ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக அந்தக் கட்சியும், ஸ்ரீ.ல.சு.கட்சியும் கூட்டு

சேர்ந்து சில தினங்களில் இடம்பெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலின் இறுதி முடிவுகளுக்கு அமைய ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மொட்டுவுக்கு எதிராக வாக்களித்திருப்பது முக்கிய விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி ராஜிக கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தோ்தல் முடிவுகள் தொடர்பில் theleader.lk இணையத்தளம் கேட்ட போதே ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதானிகளுள் ஒருவரான சட்டத்தரணி கொடிதுவக்கு இதனைத் தெரிவித்தார்.  இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது பதவி ஆசைகளுக்காக கட்சியைக் காட்டிக் கொடுத்தார்கள் என்பதற்காக கட்சி ஆதரவாளர்கள் அப்படிச் செய்யவில்லை என்பது இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மிகத் தெளிவாகின்றது. ஸ்ரீ.ல.சு.கட்சியை நாசமாக்கிய மொட்டு கட்சிக்கு அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றார்கள். அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தோல்வியடையும் என நன்கு தெரிந்திருந்தும் கூட்டணிக்கே வாக்களித்திருக்கின்றார்கள்.

உண்மையிலேயே இந்தத் தேர்தலில் மொட்டு கட்சி 56.31 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றது. கடந்த 2015 ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெந்தர எல்பிட்டிய தொகுதியில் 59.08 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவ்வாறு பார்த்தால் இம்முறை அவர்களுக்கு பின்னடைவே ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி