ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ரவு தெரி­விக்­கு­மே­யானால் அதனை தமிழ் முற்­போக்கு

கூட்­டணி வர­வேற்கும். அதில் எமக்கு ஆட்­சே­பனை கிடை­யாது என்று கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும், விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கலா­நிதி. வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்தார்.

அண்­மையில் சீரற்ற கால­நிலை கார­ண­மாக பொக­வந்­த­லாவ பகு­தியில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேற்று பார்­வை­யிட்ட பின்பு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கருத்த தெரி­விக்­கையில்,ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ரவு தெரி­விக்­கு­மே­யானால் அதனை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஐக்­கிய தேசிய கட்­சியை வெற்­றி­பெற செய்ய யார் வந்து இணைந்­தாலும் தவறு இல்லை. ஆகையால் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆத­ரவு வழங்­கினால் எங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஆட்­சே­பி­னையும் இல்லை.

அத்­தோடு 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாமல் போன­மைக்கு காரணம் இரண்டு கட்­சி­களின் இழு­பறி நிலையே.

எனவே எக் காரணம் கொண்டும் இரண்டு தேசிய கட்­சிகள் இணைந்து அர­சாங்கம் அமைப்­பது நம்­நாட்­டுக்கு பொருத்­த­மா­ன­தல்ல. இதன் கார­ண­மாக ஒரே கட்­சியில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெரிவு செய்தால் அந்த ஆட்சி மக்­க­ளுக்கு நன்மை பயக்கும்.

அதனை உணர்ந்து மக்கள் அணை­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் எதிர்­வரும் பொது தேர்­த­லிலும் வாக்­க­ளிக்க வேண்டும்.

திரு­மணம் நடை­பெற்­றதன் பின்பு கண­வனும் மனை­வியும் சேர்ந்து பய­ணித்தால் தான் அந்த குடும்பம் நல்ல குடும்­ப­மாக இலக்கை நோக்­கியும் பய­ணித்து வாழ்க்­கையில் வெற்­றிப்­பெற முடியும். அப்­படி இல்­லாமல் திரு­ம­ணத்தின் பின்பு இரு­வ­ருக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் எற்­பட்டால் அந்த குடும்பம் தனது இலக்கை அடைய முடி­யாது.

சமு­தா­யத்­திலும் அவப்­பெ­யரை சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும். அதே நிலையே இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் எற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆரம்­பத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒற்­று­மை­யா­கவும் ஒத்த கருத்­து­டனும் ஒரே இலக்கை நோக்கி பய­ணித்­தார்கள். அதன் மூலம் பல வெற்­றிகள் கிடைத்­தது.

பின்பு இரு­வ­ருக்கும் இடையில் எற்­பட்ட கருத்து முரண்­பாடு அதன் மூலம் அமைச்­சர்­க­ளுக்­கி­டையே ஏற்­பட்ட கருத்து முரண்­பாடு ஒரே அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த அமைச்­சர்கள் ஒரு­வரை ஒருவர் விமர்­சிக்க ஆரம்­பித்­ததன் கார­ண­மாக நல்­லாட்சி அர­சாங்கம் தனது இலக்கை நோக்கி பய­ணிக்க முடி­யாமல் போய்­விட்­டது.

இதன் மூலம் நாங்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்த தவறை எதிர்காலத்தில் நாம் செய்ய முடியாது. மக்களும் வாக்களிக்கின்ற பொழுது சிந்தித்து ஒரு கட்சிக்கு பெரும்பான்மையை பெற்றுக்கொள்கின்ற வகையில் வாக்களிப்பார்களேயானால் அது சிறப்பானதாக இருக்கும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி