பொதுமக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கும் வகையில், சுயநலமிக்க குறிப்பிட்ட சிலரால்

முன்னெடுக்கப்படும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்த பிரித்தானியப் பிரதமர் ரிஸி சுனக் அவர்கள், அந்நாட்டுப் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கியுள்ளார் என்று தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், அந்த நாகரிகமான ஐரோப்பிய கலாசாரத்துக்குப் புறம்பாகத் தான் ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

அந்த வகையில், சட்டவிரோதமான முறையில் பொதுமக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கச் செய்யும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குத் தான் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானியப் பிரதமரின் அதிரடித் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டி அமைச்சரினால் பதிவு செய்யப்பட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அவர், 'போராட்டங்களை நடத்துவதற்கு ஒரு முறைமை, சட்டம் மற்றும் திட்டம் உள்ளதென்று, அண்மையில் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தேன். சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்தையும் கலைப்பது எமது கொள்கையல்ல. சட்டவிரோதமான முறையில் சுயநல நோக்கத்துக்காகப் போராட்டங்களை நடத்தி, பொதுமக்களின் வாழ்க்கை முறையை பாதிக்கச் செய்யும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவிட நாம் தயாராக இல்லை' என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி