இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் தலைவர், தன்னுடைய வாகனத்துக்கு 80 லீற்றர் பெற்றோலை

மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில், 100 லீற்றர் பெற்றோலைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதென்று கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தன்னுடைய வாகனத்துக்கு மாத்திரமன்றி, வேறு நபர்களின் வாகனங்களுக்கும் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு வேளைகளில் தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போது தேவைப்படும் என்று கொள்கலன்களுக்கு சுப்பர் டீசல் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரச வர்த்தக சுற்றுநிரூபத்துக்கமைய, அரச அதிகாரி ஒருவர் மாதமொன்றுக்கு 150 லீற்றர் எரிபொருளை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.

இருப்பினும் மேற்படி அதிகாரி அதனை மீறி 1,135,748 ரூபாய் பெறுமதியில் மேலதிகமாக 8,133 லீற்றர் எரிபொருளை கொள்வனவு செய்துள்ளார் என, அந்தக் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி