மன்னார் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் உருவாகுவதற்கு அதிகரித்துள்ள போதைப்பொருள்

பாவனையே காரணம் என பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 3377 பேர் ஆண்களாகவும் 1309 பேர் பெண்களாகவும் காணப்படுகின்ற அதேவேளை, வடமாகாணத்தில் 137 பேரும்  மன்னார் மாவட்டத்தில் 11 பேரும் எச்.ஐ.வி நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

“குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனையும் ஆண்களுக்கிடையேயான பாலியல் தொடர்பு காரணமாக எச்.ஐ.வி  தொற்று ஏற்படுகிறது.

“மேலும் இதனைத் தடுக்கும் முகமாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முகமாக பல்வேறுபட்ட மட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி