மிகப் பெரும் பிரச்சினையாக ஆகியிருக்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அதற்குரிய அனுபவத்தைக் கொண்ட

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைப்பதாக சஜித் பிரேமதாசா இன்று (10) இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் வாக்குறுதி வழங்கினார்.

வடக்கின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தலைமைத்துவத்தை வழங்கி, நாட்டுக்காக இரத்தத்தையும் தியாகம் செய்த, நாட்டைப் பாதுகாப்பதற்காக சிறைக்கும் சென்று வந்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை விட இதற்குத் தகுதியான ஒருவர் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சஜித்தின் இந்தக் கூற்றிற்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பினை ஏற்றுக் கொள்வதற்கு பீல்ட் மார்சல் மக்கள் முன் வந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். சஜித்தின் உரையினைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அவருக்கு அருகில் வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பொன்சேகாவின் உறுதிமொழி!

சஜித்திடன் உரையின் பின்னர் மக்கள் முன் உரையாற்றிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, தனக்கு சஜித் பிரேமதாசாவிடமிருந்து கிடைத்த பொறுப்பை உயிர் உள்ளவரை நிறைவேற்றுவேன் எனக் கூறினார்.

இன்று படை வீரர்களைப் பற்றி பேசும் கோத்தாபய, யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தன்னை இழுத்துச் சென்று சிறையில் அடைத்ததாகவும், தனக்கு யுத்தத்தில் ஒத்துழைப்புக்களை வழங்கிய யுத்த தளபதிகள், ஜெனரல்கள், பிரிகேடியர்கள் உள்ளிட்ட 65 அதிகாரிகளை நான்காம் மாடிக்கு கொண்டு சென்று சித்திரவதை செய்ததாகவும், 10 பிரிகேடியர்கள், 10 ஜெனரல்கள் உள்ளிட்ட யுத்தத்திற்கு தலைமை தாங்கிய 35 அதிகாரிகளின் ஓய்வூதியத்தை இல்லாமலாக்கி வீட்டுக்கு அனுப்பியதாகவும், இதன் காரணமாக சில அதிகாரிகள் இருதய நோய் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி