தான் அதிகாரத்திற்கு வந்த உடனேயே, அதாவது நவம்பர் 17ம் திகதியே அநியாயமாக சிறையலில் அடைக்கப்பட்டிருக்கும் படை வீரர்களை விடுதலை செய்வதாக கோத்தாபய ராஜபக்

ஷ நேற்று (09) அநுராதபுரத்தில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

நேற்று அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் கன்னி தேர்தல் பிரசார கூட்டத்தின் போது மேடையில் வைக்கப்பட்டிருந்த டெலிபுரோம்டர் திரையிலுள்ள குறிப்புக்களை வாசித்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் lankanewsweb.net கீழ்வரும் கருத்தை பதிவு செய்துள்ளது.

ராஜபக்ஷ முகாம் இந்த “அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள படை வீரர்கள்” என்ற சொல்லினால் குறிப்பிடுவது 2015ம் ஆண்டுக்கு முன்னா் இருந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியினுள் அந்தக் குடும்பத்தின் தேவைகளுக்காக ஊடகவியலாளர்கள் கொலை மற்றும் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தல் வதைகளுக்கு உள்ளாக்கல், கப்பம் கோரல் மற்றும் கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை மற்றும் இராணுவ வீர்களையேயாகும்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவிருப்பது நவம்பர் 16ம் திகதியாகும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதும், புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து கொள்வதும் நவம்பர் 17ம் திகதியாகும். கோத்தாபய இப்படிக் கூறுவது தான் பதவிப்பிரமாணம் செய்த உடனேயே தனது பழைய குற்றச் செயல்களின் உதவியாளர்களை விடுதலை செய்வேன் என்றாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி