கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர், வேறொரு வழக்கிற்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவர் இன்று (23) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை – இசுறுபாய முன்பாக அண்மையில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது அரச சொத்துகளுக்கு சேதமேற்படுத்தப்பட்டமையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி