வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்து ​சென்று ஓமானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான பெண் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.



குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்தததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் நடத்தப்பட்ட ஆட்கடத்தல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையினரின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணை இடம்பெற்று வருகின்றது.

அதன்படி, நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆஷா திஸாநாயக்க என்ற பெண் தம்புள்ளையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் கடந்த சில காலமாக தலைமறைவாகி இருந்தார்.

பல நாட்களாக பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்த அவர், இன்று காலை ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இரண்டு சட்டத்தரணிகளுடன் சரணடைந்துள்ளார்.

அதன்படி தற்போது அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி