டுபாய் மற்றும் ஓமானுக்கு மனித கடத்தல் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (19) பிற்பகல் கொழும்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி பெண்களை ஓமன் மற்றும் அபுதாபிக்கு வேலைக்காக அனுப்பிய பிரதான சந்தேகநபரின் உதவி முகவராக செயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் அவிசாவளை-புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பெண்களை ஏமாற்றி, வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் மூலம் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மோசடியான முறையில் வெளிநாட்டுக்குச் சென்று ஏமாற்றப்பட்ட பெண்களில் ஒருவர் நாடு திரும்பிய பின்னர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி