ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,

எதிர்வரும்  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

துபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வத்தளையை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் அலுவலகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த சந்தேகநபர், ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆட்கடத்தலில் ஈடுபட்ட இரண்டு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். 

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவர் வௌிநாடு சென்றுள்ளதால், அவருக்கான பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கை பெண்களை கடத்துவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். 

ஓமானில் பாலியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை பெண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார். 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி