வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், நாளை (சனிக்கிழமை) இலங்கையை வந்தடைவார் என்றும் பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கத் தொடங்குவார் என்றும் அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வரவு செலவுத் திட்டத்திட்டம் மீதான இறுதி வாக்களிப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்குவது அவரது உடனடி பணியாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்குப் பின்னர் புதிய தேர்தலுக்குச் செல்வதற்கான முடிவு எடுக்கப்படும் வரை எந்தவித இடையூறும் இன்றி செயற்படும் வகையில் வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப்  பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

எனவே, பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் கட்சியில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய அரசியல் நெருக்கடியின்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி