மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் 02 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் சில மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சார்பில் மன்றில் ஆஜராகிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளாகிய குறித்த மாணவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்த, பெற்றோர் விருப்பம் தெரிவிக்கவில்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி