ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

குருந்துவத்தை பொலிஸார் குறித்த குழுவினரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நேற்று சுதந்திர சதுக்கத்தில் இருந்து கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதுடன், கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி