வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

 

இன்று காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், மாலை 5:30 மணி முதல் 6 மணி வரை ஒத்திவைப்பு விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டு, அன்று பிற்பகல் மூன்றாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி