மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ இன்று (08) காலை ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனாவைச் சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய

ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நீண்ட நேரம் பேசியுள்ளார்.

அத்துடன், ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுராதபுரம் சல்ஹாது விளையாட்டரங்கில் நாளை (09)  இடம்பெறவுள்ள கோத்தாபய ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது கைச்சாத்திடுவதற்கு அனுமதியை வழங்குமாறும் பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில்ஸ்ரீ.ல.சு.கட்சி மேற்கொள்ளவுள்ள தீர்மானத்தை இதுவரையில் வெளியிடப்படாததோடு, அது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை அக்கட்சியின் மத்திய செயற்குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இதுவரையில் தனது முடிவை அறிவிக்காத போதிலும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் நாளை அநுராதபுரத்தில் இடம்பெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

நிமல் சிரிபால த சில்வா, நிசாந்த முத்துஹெட்டிகம, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய போன்ற ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு றாளைய கோத்தாபய ராஜபக்ஷவின் முதலாவது கூட்டத்தில் கலந்து கொள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய பிரதே சபைத் தேர்தல் முடிவையும் அவதானித்துப் பார்த்துவிட்டு ஜனாதிபதியின் முடிவை அறிவிக்க உள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி