இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 7 தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

அதற்கமைய பூட்டான், மெக்ஸிகோ, பரகுவே, லக்சம்பர்க், ரஷ்யா, ஓமான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் கானாவின் உயர்ஸ்தானிகரும் இவ்வாறு ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி