கொழும்பு - மருதானை முதல் தொழிநுட்பக்கல்லூரி சந்தி வரை பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமையினால்

சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல் துறை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொண்டு வரும் எதிர்ப்பு பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மருதானையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி புறக்கோட்டை வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆர்பாட்ட பேரணியை தடுக்கும் வகையில் மிதக்கும் சந்தை பகுதியில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட காவல் துறையினர் நீர்தாரை பிரயோகத்திற்குரிய கவச வாகனம், மற்றும் கண்ணீர்புகை பிரயோகத்திற்கான துவக்குகள் ஆகியனவற்றுடன் வீதியை மறித்து ஆர்பாட்டக்காரர்களை தடுத்துள்ளனர்.

எனினும் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தியவாறு ஆர்பாட்டக்காரர்கள் காவல் துறையினருடன் முரண்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி