வணக்கத்திற்குரிய பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சிறிசுமண தேரரை இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய பொரளை சிறிசுமண தேரர் நேற்று (01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது தெரியவந்த உண்மைகளுக்கு அமைய பொரளை சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான திலினி பிரியமாலி மற்றும் இசுரு பண்டார ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி