நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை நியமனம் பத்திரம் தாக்கல் செய்த பின்னர் அறிவிப்பதற்கு

ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று காலை வெளியானதை அடுத்து எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கடும் கோபத்திற்கு உள்ளதாக மொட்டு கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரத்தை நேற்று இரவு இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது செயற்குழு ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்ததோடு, ஜனாதிபதியின் இறுதி முடிவை இன்று காலை 11.00 மணிக்கு தெரிவிப்பதாக சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார் திசாநாயக்கா ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமக்கு சாதகமான தீர்மானத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று இடம்பெறவிருந்த சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டை ஹிரு மற்றும் தெரண தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு ஏற்பாடுகளைச் செய்திருந்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெறுமா என theleader.lk ஜனாதிபதி செயலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அது பிற்போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி