இலங்கையின் கடன் வழங்குனர்கள் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தமது ஆதரவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

 

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை – பொருளாதார நிலை என்ற தலைப்பில் கொள்கை ஆய்வுகள் நிறுவகத்தினால் தொகுக்கப்பட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் மற்றும் உற்பத்தி இழப்புகளை மீளப் பெறுதல் ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் தீர்க்கும் நடவடிக்கைகள் தற்போதே ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் மட்டுமே தீர்க்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கும் இலங்கையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி