பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தொடர்ந்து 4 நாட்களாக அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 18ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி