தனது ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று தற்போது நாட்டில் நட்புறவான வெளிவிவகாரக் கொள்கை இல்லாமையினாலேயே

தற்போதைய நெருக்கடி நிலையை மோசமாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் மிகவும் கேள்விக்குரிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி