நடைபெறவுள்ள ஜனாதிபத தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்கவே முன்னாள் சபாநாயகர்

சமல் ராஜபக்ஷ நேற்று (04) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் “ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுண” என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளராக அவருக்கான கட்டுப்பணத்தை ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிக நெருங்கிய உறவினரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க செலுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுணவின் செயலாளராக அவர் இந்தக் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கையின் பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடை செய்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமா கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பெரும்பாலும்  கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பாதகமாகவே தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளதாக மொட்டுவின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் எதிர்கட்சி தலைவரைச் சந்தித்து தெளிவு படுத்தியதைத் தொடர்ந்தே  இவ்வாறு சமல் ராஜபக்ஷவுக்காக கட்டுப்பணத்தைச் செலுத்துமாறு எதிர்கட்சித் தலைவர்  அறிவித்திருந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தனக்கு சாதகமான முறையிலேயே வழக்குத் தீர்ப்பு கிடைக்கும் என தனது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளதாக எதிர்கட்சி தலைவரிடம் பல தடவைகள் கூறியிருந்த கோத்தாபய ராஜபக்ஷ, நேற்று பகல் மீண்டும் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளதுடன் வேறு எந்த ஒரு அபேட்சகரையும் நியமிக்க வேண்டாம் என்றும் கேட்டிருந்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி