களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நாளை முற்பகல் 8.30 முதல் 12 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, நாகொட, பொம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கோன, அளுத்கம, தர்காநகர் மற்றும் பென்தர ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி