அரசாங்கத்தின் அடுக்குமுறையைக் கண்டிப்பதாகத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 7 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனதத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடுக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஊடாக பேரணியாகச் சென்றது. இதன்போது வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பொலிசார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து 7 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிஸ் பேச்சாளரிடம் கேட்டபோது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிசாரின் அனுமதி பெறப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி