இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும்

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பேக்கரிகளுக்கான 50% கோதுமை மா விநியோகத்தை இரண்டு பிரதான நிறுவனங்கள் செய்வதாகவும் அவர்கள் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே பாண் விலை குறையும் என்றார்.

குறித்த இரு நிறுவனங்களும் 280 முதல் 310 ரூபாய் வரை மாவை விற்பனை செய்வதாகவும் அவை விலையைக் குறைக்கும் என்பதை நம்பமுடியாது என்றும் குறிப்பிட்ட அவர், விலை குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் சந்தையில் 350 ரூபாய்கே மா விற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி