நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தை குறைக்க மின்சார சபை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

 

நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் குறைந்த எரிசக்தி தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை அதிகரித்தால் எதிர்வரும் காலங்களில் நாளாந்த மின்வெட்டை குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி