50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 100 ரூபாயால் குறைப்பதற்கு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை செய்யும் இன்சீ சீமெந்து நிறுவனம், டோக்கியோ சுப்பர் மற்றும் நிப்பொன் ஆகிய சீமெந்து வகைகளின் விலைகளே குறைக்கப்படவுள்ளன.

அதற்கமைய, 50 கிலோகிராம் நிறையுடைய இன்சீ சன்ஸ்தா மற்றும் இன்சீ மஹாவலி மரைன் பிளஸ் சீமெந்து மூடையின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என இன்சீ சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

நிர்மாணத் தொழில் துறையைக்கு உதவும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

அதேவேளை, டோக்கியோ சுப்பர் மற்றும் நிப்பொன் ஆகிய சீமெந்து வகைகளின் விலைகளும் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அந்தந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதற்கமைய 3200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்று 3100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி