ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக மேலும் 16 அரசியல் கட்சிகள்

மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று (02) தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.

சிறந்த அரசியலுக்கான தேசிய அமைப்பு என்ற பெயரில் இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு இவர்கள் தமதுஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்  ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, ஸ்ரீ.ல.சு.கட்சியின் முன்னாள் அமைச்சரான் அத்தாவுட செனவிரத்ன, ஸ்ரீ.ல.சு.கட்சியின் அநுராதபுர அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.பி.ஏக்கநாயக்கா,  ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் தலைவர் அஜந்த ஹேவகே, தேசிய முன்னணியின் தலைவர் ரஞ்சித் பீரிஸ், தேசிய அபிவிருத்தி முன்னணியின் தலைவர் பேராசிரியர் எம். பி. அத்தநாயக்கா, மலையக விடுதலை முன்னணியின் தலைவர் எண்டன் ஐயாதுரை, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் தலைவர் சுசில் கிதெல்பிட்டிய, சுகாதார தொழிலாளர் நிபுணர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஸ், ஐக்கிய லங்கா மக்கள் முன்னணியின் தலைவர் எஸ். விஜேவிக்ரம, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் பத்மசிரி கொடிகார, கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எல்லாவல, ஜாதிக அருணலு பெரமுணவின் தலைவர் டாக்டர் கிருஷாந்த, கம்பஹா மாவட்ட வைத்திய குழுவின் தலைவர் டாக்டர் குமாரி குணரத்ன, மவ்பிம ஜாதிக பெருமுணவின் பொதுச் செயலாளர் வில்சன் வலிமுணி, கொமியுனிஸ்ட் இளைஞர் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் எஸ். ஆர். எட்வட் மற்றும் சிவில் அமைப்புக் குழுவின் தலைவர் சத்துர வெலிவிட்ட போன்றோர் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்க முன்வந்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி