கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்கோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு நேற்று இரவு பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட பொலிஸ் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில், கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது, கலென்பிந்துனுவெவயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீதும், பொலிஸார் தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதில்,பேருந்தின் பின் ஆசனத்தில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி