ஜனாதிபதி தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (மொட்டு) கட்சியுடன் அடுத்த தினங்களில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்

கொள்ளப்படாவிட்டால் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தயாசிரி ஜயசேகர ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவது தொடர்பில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருக்கு எவ்வழியிலும் ஆதரவை வழங்காதிருப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தமது கட்சி மொட்டு கட்சியுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்கா அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கூறியிருந்தாா்.  ஸ்ரீ.ல.சு.கட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு குமார வெல்கம தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பில் ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமைத்துவத்திடமிருந்து சாதகமான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி