இன்றைய தினம் மின்வெட்டு காலத்தை 3 மணிநேரமாக நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நாளை முதல் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி