மத்திய  மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான

ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக  30 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கால எல்லை மற்றும் நன்கொடை ஒப்பந்தத்தின் செல்லுபடியான காலத்தை 2025 ஆம் ஆண்டு 06 ஆம் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி