திரிபோஷவில் நச்சுதன்மை வாய்ந்த பதார்த்தம் அடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 



விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷவில் எஃப்ளொடொஸின் என்ற நச்சுப்பொருள் அடங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன், பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று தெரிவித்தார்.

இதனால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக் யார் பதில் சொல்வது, திரிபோஷ விநியோகத்தில் ஒழுங்குமுறைகள் இல்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாம் முழுமையான சேதன பசளை பாவனைக்கு மாறிய வேளையில் திரிபோஷ உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இது தொடர்பில் பிரச்சினை நிலவிய அதனை நான் மறுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கான திரிபோஷவுக்கான தட்டுப்பாடு நிலவியது பின்ன் யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.

எவ்வாறாயினும், திரிபோஷவில் அப்ளொடொக்ஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன்.

எந்தவித அடிப்படையும் இல்லாமல் இவ்வாறு கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நான் தயாராகவுள்ளேன்.

இவ்வாறானதொரு கருத்தை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களின் அனுமதியை பெறுவது அவசியமாகும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி