ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுப்பதற்கான உத்தரவை

விநியோகிக்குமாறுக் கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் பிரபல அரசியல் விமர்சகர் விக்டர் ஐவன், “கோட்டாபய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவுட்டாகி விடக் கூடும்” என்றும் கூறியுள்ளார்.

குறித்த மனு மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ள விக்டர் ஐவன், அப்பதிவில் இதனைத் தெரிவிதுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையினை இரத்துச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டு முறையற்ற வகையில் இந்நாட்டு கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முறையான குடியுரிமைச் சான்றிதழைச் சமர்ப்பிக்காது இவ்வாறு கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை என்பவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தும் மனுதாரர்கள், அந்த கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன வழங்கப்படுள்ள முறை சட்டத்திற்கு முரணானது என்றும் கூறியுள்ளனர்.

“ராவய” பத்திரிகையின் ஆலோசகர் விக்டர் ஐவன் தனது முகநூல் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,

“கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கையும், காமினி வியன்கொட மற்றும் பேராசிரியர் தேவநுவர ஆகியோர் கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் தொடர்புடைய அறிக்கைகளையும் நான் நன்கு ஆராய்ந்து பார்த்தேன். அதன் மூலம் அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உரிமை இல்லை என்பது என நிலைப்பாடாகும்.

முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தள்ளி வைத்துவிட்டு அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு பிரச்சினையினை மாத்திரம் எடுத்துக் கொண்டால் அவர் செய்திருக்கும் குற்றம் மிகவும் பாரதூரமானது. அவரது குடியுரிமை சட்டத்தை மீறியுள்ளது. குடிவரவு, குடியகழ்வு சட்டங்களை மீறியுள்ளது. போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.

அவர் பழைய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டிருப்பது 1976. 12. 21ம் திகதியாகும். அதன் இலக்கம் 491724021V என்பதோடு, கடவுச் சீட்டு இலக்கம் N 5384975 என்பதாகும். அவருக்கு அமெரிக்க குடியுரிமை  கிடைத்திருப்பது 2003ம் ஆண்டிலாகும்.

குடியுரிமைச் சட்டத்திற்கு அமைய வெளிநாடு ஒன்றில் குடியுரிமையினைப் பெற்றுக் கொண்ட நபர் ஒருவருக்கு இலங்கையின் குடியுரிமை தானாகவே இரத்தாகிவிடும். 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அவர் இலங்கைக்கு வந்திருப்பது அமெரிக்காவின் பிரஜையாக தற்காலிக சுற்றுலா வீசாவின் கீழாகும் என்றும் நீண்ட அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி