Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து வர்த்தமானி வெளியீடு!

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2022 • 3:17 AM

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து வர்த்தமானி வெளியீடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவ்லினிக் அமில மாத்திரையின் விலை 59.79 ரூபாவிலிருந்து 83.71 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மில்லி கிராம் குளோரித்ரோமைசின் மாத்திரையின் விலையும் ரூ.86.31 ஆக உயர்ந்துள்ளது.
  • மில்லிகிராம் டொக்சிசைக்ளின் மாத்திரையின் விலை 17.07 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 23.90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில், “ஒவ்வொரு வர்த்தகர், விநியோகஸ்தர், மருந்தாளுநர், மருத்துவப் பயிற்சியாளர், பல் மருத்துவர், கால்நடை மருத்துவர், தனியார் மருத்துவ நிறுவனம், மருந்தகம் அல்லது திட்டமிடப்பட்ட மருந்துகளை வைத்திருப்பவர் உள்ளிட்ட மருத்துவ நிறுவனம் விற்பனையானது திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலையை  பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

60 வகையான மருந்துகளுகளின் விலைகளை  40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவ்லினிக் அமில மாத்திரையின் விலை 59.79 ரூபாவிலிருந்து 83.71 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

250 மில்லி கிராம் குளோரித்ரோமைசின் மாத்திரையின் விலையும் ரூ.86.31 ஆக உயர்ந்துள்ளது.

100 மில்லிகிராம் டொக்சிசைக்ளின் மாத்திரையின் விலை 17.07 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 23.90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 75 மில்லி கிராம் ஆஸ்பிரின் மாத்திரையின் விலை ரூ.5.06ல் இருந்து ரூ.7.08 ஆக அதிகரித்துள்ளது.

மெட்ஃபோர்மின் 500 மில்லிகிராம் மாத்திரையின் விலை 6.64 ரூபாவாக இருந்ததுடன், புதிய விலை 9.34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

29 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிராம் தைரொக்ஸின் மாத்திரையின் விலையும் 14.41 ரூபாவாக உயர்ந்துள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருந்துகளின் விலைகள் முன்னதாக மார்ச் 15ஆம் திகதிய 2241/43 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள மாத்திரைகள் தொடர்பான விபரம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...