Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

T

The Leader Desk

டிசம்பர் 18, 2024 • 7:17 AM

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருட்டுக்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கல்வித் தகைமைகளை தேடும் குறுகிய அரசியல் இலக்கில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
  • இன்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக, 55% பாடாசாலை மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
  • பாதிக்கப்பட்ட பிள்ளைகளில், 53.2% பாடசாலை உபகரணங்களை வாங்குவதை முற்றிலும் நிறுத்தியுள்ளனர். 62.1% பிள்ளைகள் முன்பு பயன்படுத்திய பாடசாலை உபகரணங்களையே மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
எழுத்து அளவு:

திருட்டுக்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கல்வித் தகைமைகளை தேடும் குறுகிய அரசியல் இலக்கில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான குறைநிரப்பு மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
 
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக, 55% பாடாசாலை மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இது கிராமப்புற மற்றும் பெருந்தோட்டக் பிள்ளைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளில், 53.2% பாடசாலை உபகரணங்களை வாங்குவதை முற்றிலும் நிறுத்தியுள்ளனர். 
 
62.1% பிள்ளைகள் முன்பு பயன்படுத்திய பாடசாலை உபகரணங்களையே மீண்டும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இடர் நிலைக்கு உள்ளாகியிருக்கும் பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் வகையில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதற்கு பாடசாலை பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அஸ்வெசும உரித்துடைய குடும்பங்களின் ஐந்து வயது முதல் பதினாறு வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஒரு பிள்ளைக்கு ஆறாயிரம் (6000) ரூபாய் கொடுப்பனவை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வெசும நிவாரணம் கிடைக்காத நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
 
மேலும், பிள்ளைகளை குறிப்பாக பாடசாலை கல்வியில் ஈடுபாடுடையவர்களாக  வைத்திருக்க அரசு செயற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மதிய உணவு வழங்குவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்காகப் பணம் ஒதுக்கப்பட்டாலும், இந்த உணவு எல்லா பிள்ளைகளுக்கும் உரியமுறையில் கிடைத்ததா என்பது கேள்விக்குறியதாகும்.
 
2025 ஆம் ஆண்டிற்கு அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை சீருடைகளை வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக சீன அரசாங்கம் எங்களுக்கு முழுமையாக சீருடைகளை வழங்கியுள்ளது. இதற்காக சீன அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 
 
நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண முற்படும் வேளையில் எதிர்கட்சியின் சில குழுக்கள் தங்களுடன் தொடர்புடைய ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பது குறித்து நான் கவலையடைகிறேன்.
 
சீன அரசாங்கம் பாடசாலை சீருடை வழங்கும் போது நடந்த சம்பவத்தில் என்னையும் இணைத்து சீன அரசிற்கு கூட இல்லாத பிரச்சினையை எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் உள் நோக்கத்தை சீன தூதரும் சீன அரசும் புரிந்து கொண்டனர். 
 
எமது அரசாங்கத்தால் சர்வதேச உறவுகளை முறையாக பேண முடியாது என்ற கருத்தை சமூகமயப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
 
தற்போது எமது அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் கல்வித் தகைமையில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக அக்கறை ஏற்பட்டுள்ளது. முன்னர், எதிர்க்கட்சிகள் அரசின் கல்வித் தகைமைகள் குறித்தல்லாது, திருட்டைப் பற்றியே பேசின. 
 
இப்போது எங்கள் திருட்டுகளை கண்டு பிடிக்க முடியாததால் கல்வித் தகைமைகளைத் தேடுகின்றனர். மக்களுக்காக நேர்மையாக ஒரு பொய்யை அம்பலப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், இந்த விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கிறோம். ஆனால் இங்கு மிகக் குறுகிய அரசியல் நோக்கமே உள்ளது. இந்த அரசாங்கம் நியமிக்கப்பட்டது முதல், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை குறைத்து மதிப்பிட முயன்றன.  எங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை மக்கள் மயப்படுத்த முயற்சித்தார்கள்.
 
இந்த பாராளுமன்றத்தை மக்கள் எந்த நோக்கத்திற்காக தெரிவுசெய்தார்கள் என்பதை எதிர்க்கட்சி இன்னும் புரிந்து கொள்ளவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு!- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய | Tamil Leader | We Lead the Nation