நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஏதேனும் சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன

பெரமுண (தாமரை மொட்டு) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திணேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (30) கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ஷவின் பெயரும் இங்கு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்கட்சித் தலைவருக்கும் கூட்டு எதிர்கட்சியின் கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி