பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து

பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (16) காலை 8 மணிக்கு அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் ஏற்பாட்டினை அடுத்து இன்று காலை 8 மணிக்கு காந்தி பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா. அரியேந்திரன், முன்னாள் அரசாங்க அதிபர் உதயகுமார் மற்றும் அரசியல்வாதிகள் வணபிதாக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினந்தனர்.

இதில் ´பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்போம்´ ´பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல்கைதினை விடுதலை செய்யவும்´, என தெரிவித்து சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி