19 ஆம் திகதி அரச விடுமுறையாக இருந்தாலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19 ஆம் திகதி அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அன்றைய தினத்துக்கு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அன்றைய தினம் கடவுச்சீட்டு வழங்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 19 ஆம் நாளை அரசாங்கம் சிறப்பு விடுமுறையாக அறிவித்திருந்த நிலையில், பாடசாலைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றைய தினத்தை விடுமுறை தினமாக கருதி செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி