ரீலங்கா பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை குடிரிமையின் செல்லுபடித் தன்மையினை சவாலுக்கு உட்படுத்தி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையினை ஒக்டோபர் 2, 3, 4ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) திகதியை வழங்கியது.

கோத்தாபய ராஜபக்ஷ 2005ம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையினை முறையான ஒழுங்கு முறையில் பெற்றுக் கொள்ளாததால் அவர் இன்னமும் அமெரிக்க பிரஜையே எனக் குறிப்பிட்டு “சிவில்  அமைப்புக்களின் கூட்டு” சார்பில் பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் பிரபல எழுத்தாளர் காமினி வியன்கொடை ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கோத்தாபய ராஜபக்ஷ நடைமுறையிலுள்ள விதிகளை மீறி இரட்டைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடும் மனுதாரர்கள், 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் அவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரோ அல்லது அமைச்சு செயலாளரோ இருக்கவில்லை என்றும், குடியுரிமைச் சான்றிதழில் “அமைச்சருக்கு பதிலாக” என எவரோ கையொப்பமிட்டுள்ளதாகவும்  அது யார் என்பது தெளிவில்லாமல் உள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான விடயங்களின் அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ஷவின்  இலங்கைப் பிரஜைவுரிமை செல்லுபடியற்றது என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனா். எனவே கோத்தாபய ராஜபக்ஷ சட்டரீதியான இலங்கை குடியுரிமையினைப் பெற்றுக் கொள்ளவில்லை என்ற உத்தரவு ஒன்றினை வழங்குமாறு மனுதாரர்கள் கேட்டுள்ளனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக  குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்ளக விவகார அமைச்சர்  உள்ளிட்டோர் பெயர் குறிப்பட்டுள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி