ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார பணிகளின் பிரதான முகாமையாளராக அமைச்சர் மலிக் சமரவிக்ரம
நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் தலைமையில் நேற்று (28) அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் வீட்டில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, சம்பிக ரணவக்க, பீ. திகாம்பரம், ரிசாட் பதியுத்தீன் ஆகிய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 50 வருட கால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவருமாகும். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை நியமிக்குமாறு பிரதமரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கோரிக்கை விடுத்த முதலாவது அரசியல்வாதி மலிக் சமரவிக்ரமவாகும்.