பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலலா ஜயசேகர பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கொலை வழக்கு தொடர்பில் மரணதண்டனை உட்பட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மார்ச் மாதம் விடுதலை செய்தது.

2015 ஆம் ஆண்டு கஹாவத்தையில் நபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்படும் 38 ஆவது இராஜாங்க அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.

வியாழன் (08) 20 அமைச்சர்களைக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 37 புதிய இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி