தகுதியற்ற மருத்துவர்கள் போலியான உரிமம் மற்றும் சான்றிதழ்களைப் பயன்படுத்தி

மருத்துவ நிலையங்களை  நடத்தி வருவது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் இடையிலான கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (03)  இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் கலாநிதி தர்ஷன சிறிசேன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவும் பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டனர்.

மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இலச்சினை ஸ்டிக்கரை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் போலி சான்றிதழ்களைப் பெற்று வைத்தியர்கள் போல் காட்சியளிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .

மேலும், தரமற்ற மருந்துகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்தல், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உட்பட பல விசாரணைகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வீதிகளில் அன்றாடம் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைத்தல். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி